சுதந்திரப் போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா: கட்டாலங்குளத்தில் கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை
சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.