செங்குன்றம் செய்தியாளர்
ஜீலை.11
மாதவரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் இமிலிஜெயசிங் அவருடன் காவல் நிலைய எழுத்தர் ஹரி ஆகியோர்கள் மூன்று ஆண்டுகளாக இணைந்து தொடர்ந்து பணியாற்றி வந்தார்கள்.
தற்போது இவர்களுக்கு பணிமாறுதல் வந்து வேறு இடத்திற்கு செல்வதால் அவர்களை பாராட்டி கவுரவிக்கும் வகையில் மாதவரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பூபாலன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்தி மாலைகள் அணிவித்து பேசினார்.அவருடன் உதவி ஆய்வாளர்கள் போலீசார் அனைவரும் உடனிருந்தனர்.