பெரம்பலூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை முன்வைத்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உரிமைகளை மீட்டிட மாநிலம் தழுவிய மாலை நேர கருப்பு தின ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் மேனகா தலைமைய நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தமிழரசி துவங்கி வைத்தார். சிறப்பறையாக அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மணிமேகலை கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றினார் .நிறைய உரையாக CITU மாவட்ட செயலாளர் அகஸ்டின் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார்.
இறுதியில் அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சுமதி நன்றி உரையாற்றினர்.
2012 ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் நாள் இந்திய பொருளாதாரத்தில் அங்கன்வாடி மையங்களை அந்தந்த மாநிலங்கள் தனியாருக்கு கொடுக்கலாம் என சட்ட நிறைவேற்றப்பட்டது. இந்த நாளை இந்தியா முழுவதும் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் கருப்புத் தினமாக 2012 இல் இருந்து கடைப்பிடித்து வருகிறோம் இந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி கருப்பு தினமாக கடைப்பிடிக்க தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது
ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1993 பதவி உயர்வு உடனடியாக வழங்கிட கோரி
2023 ஒன்றிய அரசின் பட்ஜெட் அங்கன்வாடி திட்டத்தில் 2022-ல் ஒதுக்கிய நிதியை காட்டிலும் ரூ.300 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது
அடுத்த பட்ஜெட்டில் அங்கவாடி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக அதிகரிக்க கோரியும்
தரமான உணவு அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் தரமான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தவும் .
வாடகை மையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
எல்.கே.ஜி. யு.கே.ஜி வகுப்பை அங்காடி ஊழியர்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கிரேடு 3மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியம் ஊதியர்களுக்கு 26,000 /உதவியார்களுக்கு 18000 /ஓய்வூதியம் 10,000/ வழங்க வேண்டும்
45 வயது ஐஎல்சி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்
பத்தாண்டு பணி முடிந்த அனைவருக்கும் அங்கன்வாடி உள்ளவர்களுக்கு மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது