மதுரையில்
தொழிலாளர்களை பாதிக்கின்ற, தொழிலாளர் சட்டத்தொகுப்பை கைவிட கோரியும், பொதுத்துறைகளை தனியார் மயமாக்கின்ற தேசிய பணமாக்கல் திட்டத்தை கைவிட கோரியும், மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கைவிடு, ஆன்லைன் அபதாரத்தை கைவிட கோரியும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிப்பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த கோரியும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியமாக ரூ.26,000 வழங்கிட கோரியும், இ.பி. எப். ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச பென்சனாக ரூ.9000/-வழங்கவும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் அரவிந்தன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட பொருளாளர் ஜி. கௌரி, மாவட்ட நிர்வாகிகள் பொன்.கிருஷ்ணன், பிச்சைராஜன், காளிராஜன், சௌந்தர், எஸ்.எம்.பாண்டி, நல்.மூர்த்தி, மணிகிருஷ்ணன், மலை.கண்ணன், மணவாளன், ஆகியோர் பேசினார்கள்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மேலூர் தாலுகா செயலாளர் கண்ணன் வாழ்த்தி பேசினார். நிறைவு செய்து வைத்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் மகாலெட்சுமி பேசினார். சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மேலூர் தாலுகா செயலாளர் சேகர் நன்றி கூறினார்.