அரியலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பெரும் திறல் முறையிட்டு ஆர்ப்பாட்டம் அரியலூர் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு நடைபெற்றது.
நிகழ்விற்கு மாவட்ட தலைவர் வகீல் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சரவணகுமார் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என சுமார் 50 பேர் பங்கு கொண்டனர். வழக்கை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாவட்ட சுகாதார அலுவலரின் தொழில் நுட்ப நேர்முக உதவியாளர் பதவி உயர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும். மக்களை தேடி மருத்துவம் திட்ட சுகாதார ஆய்வாளர்கள் ஊதியத்தை ரூபாய்.20,000 ஆக உயர்த்த வேண்டும். மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ஊதிய முரண்பாட்டை சரி செய்து ஆணையிட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த 07.11.2008 முன் தேதி இட்டு அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொருளாளர் சிவராமன், துணைத்தலைவர் அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட இணை செயலாளர் அருள்பிரியன் அவர்கள் நன்றி கூறினார்.