திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ) சிவகுமார் பணியாற்றி வந்தார். இவர் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு பணி மாறுதல் ஆன நிலையில், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணியாற்றி வந்த செந்தில், வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பொறுப்பேற்றுக் கொண்டார்.