திருவாரூர் மாவட்ட அண்ணா திமுக நிர்வாகிகள். ஆலோசனைக் கூட்டம்.

அண்ணா திமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அவர்கள் தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும் நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வந்த பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவித்தார்கள்
அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மன்னார்குடி கட்சியின் தலைமை அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும் மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா. காமராஜ். தலைமையில் நடைபெற்றது. தலைமையேற்று பேசிய முன்னாள் காமராஜ் ஆலோசனை வழங்கி பேசினார்.
ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான பாப்பா சுப்பிரமணியன் கழக அமைப்பு செயலாளரும் மன்னார்குடி முன்னாள் நகர மன்ற தலைவருமான சிவா ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர்.