ஆண்டிபட்டியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் ஆர் மகாராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா பகுதியான டி. சுப்புலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் சட்டமன்ற உறுப்பினர்.ஆ மகாராஜனிடம் கோரிக்கை வைத்தனர் இந்த கோரிக்கையை பரிவுடன் பரிசளித்து 65.5. லட்சம் ஒதுக்கீடு செய்து பள்ளி வகுப்பறை கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது
இந்த கட்டிடத்தை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் ரிப்பன் வெட்டி திறந்து பள்ளி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் நகர செயலாளர் சரவணன் டி. சுப்புலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்