உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வர் கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக உஜ்ஜைன் மாநகராட்சி மேயர் முகேஷ் தட்வால் வெளியிட்டுள்ள உத்தரவில், தங்களின் கடைகளின் முன் உரிமையாளர்கள் தங்களின் பெயரையும், தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். உத்தரவைப் பின்பற்ற தவறும் பட்சத்தில் முதல் முறை 2000 ரூபாயும் 2 வது முறை 5000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து வருடம் முழுவதும் மகாகாளேஸ்வர் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவர் என்பது கவனிக்கத்தக்கது.இந்த உத்தரவு பாதுகாப்புக்காகவும் வெளிப்படைத்தனமையை உறுதிசெய்ய மட்டுமே என்றும் முஸ்லிம் கடை உரிமையாளர்களை குறிவைத்து அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக தொடங்கிவைத்துள்ள இந்த புதிய சர்ச்சை மக்கள் அதிகம் வருகை தரும் நகரங்களில் இஸ்லாமியர்களின் வாழ்வாதார்த்தை பாதிக்கும் என்ற விமர்சனக்குரல்கள் எழுந்துள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *