சென்னைக்கு செல்ல ஆசிரியர்களுக்கு காவல்துறையினர் தடை – ஆசிரியர்கள் – காவல்துறையினர் வாக்கு வாதம்
பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்வது, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவது என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பஸ்ஸில் சென்னை கிளம்புவதற்காக தயாராகஇருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சென்னைக்கு செல்ல அனுமதி இல்லை என்று கூறியதால் ஆசிரியர்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்