செங்குன்றம் செய்தியாளர்
செங்குன்றம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஐந்து கிலோ கஞ்சா சிக்கியது.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் போலீஸ் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூன்று கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .
பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது மஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (வயது 22) சத்திய வீடு பகுதியை சேர்ந்த கார்த்திக்( வயது 32) மணலி பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (வயது 61) ஆதிக்கம் மேடு பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 25 ) ஆகிய நால்வர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 5 கிலோ கஞ்சாவையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் .
அதேபோல் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் வந்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த லோகநாதன் (வயது 23 ) என்பவரிடம் இரண்டு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் ஒருவர் அங்கிருந்து தம்பி ஓடிவிட்டார்.
இது குறித்து செங்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்த 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.