திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முக்கிய இடமான சண்முக நதி பாலத்தில் இருபுறமும் மழைநீர் வடிகால் நீர் செல்லக்கூடிய பாதையை மணல்கள் மூடி மண் திட்டாகியும் புதர் மண்டியும் உள்ளது. இதனால் மழை பெய்யும் நேரத்தில் பாலத்தில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர் மேலும் இந்த பாலத்தில் மழைநீர் தேங்குவதால் பாலம் பழுதடையும் நிலைமையும் மழை நீர் தேங்கும் போது எதிரே வரும் வாகனங்களினால் மழைநீர் இருசக்கர வாகன ஓட்டிகளில் மீது தெறித்தும்,நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட NH & SH அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எந்த பலனும் இல்லை அதிகாரியிடம் முறையிட்டு எவ்வித நடவடிக்கை எடுக்க படவில்லை.இதுவரை இதற்கான புகாரை ஏவறும் ஏற்றுக் கொள்வதில்லை இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து விபத்து மற்றும் பாலம் சேதம் அடையாமல் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.