செய்தியாளர். ச. முருகவேல். புதுச்சேரி
இந்திய மக்கள் உரிமை நீதி பொது நலச்சங்கத்தின் நிறுவனர் & தேசிய தலைவர் சேவா ரத்னா டாக்டர் பால. கன்னியப்பன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது…
விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. கடந்த 6 மாத காலமாக புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்டமங்கலம் ரயில்வே கேட் மூடப்பட்டு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கண்டமங்கலத்தில் விழுப்புரம் புதுச்சேரி நெடுஞ்சாலையை ஒட்டி போக்குவரத்துக்கு சாலையில் மாற்று பாதை அமைக்காமல் பொதுமக்களையும் அவசரமாக மருத்துவமனை செல்லும் நோயாளிகளையும், பள்ளி மாணவர்களையும் அலைகழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் DPL நிர்வாகங்களை கண்டித்து பொதுமக்களை திரட்டி இந்திய மக்கள் உரிமை நீதி பொது நலச்சங்கம் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று டாக்டர் கன்னியப்பன் கூறியுள்ளார்