செங்குன்றம் செய்தியாளர்
சென்னை செங்குன்றத்தில் சைதாப்பேட்டை கூட்டுறவு சங்கம் சூப்பர் மார்க்கெட் அருகில் ஆவின் பாலகம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பொது மேலாளர் நீதிஅரசன் மற்றும் மேலாளர் தனிகாசலம் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
மேலும் ஆவின் பால் மட்டுமின்றி ஆவின் சம்பந்தப்பட்ட இனிப்பு வகைகள் கார வகைகள் நெய் வெண்ணெய் போன்ற பால் பொருட்கள் மலிவான விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதில் நாயவாரிக்குப்பம் பேரூராட்சி மன்ற தலைவர் தமிழரசி குமார் துணைத் தலைவர் விப்ரோ நாராயணன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் திமுக கட்சி நிர்வாகிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.