அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம்
அலங்காநல்லூர்வட்டாரத்தில்
,வேளாண் விற்பனை மற்றும் வேளாண்மை வணிக துறையின் மூலமாக,தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் சாத்தையாறு துணை வடிநில பகுதியில் அலங்காநல்லூர் பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதில் அலங்காநல்லூர் மற்றும் மதுரை மேற்கு வட்டாரங்களை சேர்ந்த 15 கிராமங்களில் இருந்து 620 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த நிறுவன உறுப்பினர்களிடமிருந்து தேங்காய்,கொப்பரை கொள்முதல் செய்து வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ. நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் கொய்யா, வாழை மற்றும் மக்காச்சோளம் போன்ற வேளாண் விளைப் பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர்
அடுத்த கட்ட முயற்சியாக மசால் பொடி அரவைக்கு தேவையான தேவையான 13 வகையான மூல பொருட்கள் அடங்கிய தொகுப்பை முதற்கட்டமாக சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் விற்பனை தொடங்கி உள்ளனர்
வேளாண்மை துணை இயக்குனர் வேளாண் வணிகம் அவர்கள் மசால் பொடி தொகுப்பு முயற்சியை பாராட்டி விற்பனையை துவக்கி வைத்தார் .
இது குறித்து நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரான ராஜபாண்டி, கூறியதாவது: .
நிறுவன உறுப்பினர்கள் விளைவிக்கும் மஞ்சள், கொத்தமல்லி, மிளகாய் போன்ற பொருட்களை கொள்முதல் செய்து மசாலா பொடித் தொகுப்பிற்கு தேவையான மீதமுள்ள பொருட்களை மொத்த கடையில் நேரடியாக கொள்முதல் செய்து சந்தை விலையை விட குறைவான விலையில் விற்பனை செய்து வருகின்றோம்.
இதன் மூலம் தரமான பொருட்கள் குறைந்த விலையில் எங்களது உறுப்பினர்களுக்கு கிடைப்பதுடன் எங்களது நிறுவனத்திற்கும் லாபம் தரும் வகையில் உள்ளது.
வருங்காலத்தில் நிறுவன உறுப்பினர்கள் விளைவிக்கும் பசுமையான நஞ்சில்லா காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்முதல் செய்து தேவைப்படும் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத பொதுமக்களுக்கும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்,
இந்த நிகழ்ச்சியில் மதுரை வேளாண்மை துணை இயக்குனர் வேளாண் வணிகம் மெர்சிஜெயராணி,
வேளாண்மை அலுவலர் மதுரை கோட்டம் மலர்விழி,உதவி வேளாண்மை அலுவலர்கள் கண்ணன், பரமேஸ்வரன் மற்றும் நிறுவன இயக்குனர்களான தனிராஜன், தங்கராஜ், அனுமதிபாண்டி மயில்வாகனம், தேன்மொழி, ஆறுமுகம்,, வெள்ளையன், சாக்ரடீஸ், தேசிய வேளாண் நிறுவன அலுவலர் முருகன், முதன்மை செயல் அலுவலர் ராஜபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.