விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் கல்பனா உள்பட நகர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் ராஜபாளையம் குறுக்கே செல்லும் தென்காசி தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் உள்ள வாறுகால்களை உயர்த்துவதற்கு நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை துறையை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ச்சியாக அலுவலர்கள் சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் குறித்து சங்கர் கணேஷ், ஜான் கென்னடி, சீனிவாசன் உள்பட நகர் மன்ற உறுப்பினர்கள் பேசினார்கள். நகர் மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் அனைத்திற்கும் பதில் அளித்தனர். மொத்தத்தில் 161 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.