கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் 9842427520.
கேரளா மாநிலம் வயநாடு மற்றும் தமிழ்நாடு கேரளா எல்லை பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளப் பெருக்கெடுத்து ஓடி வருகிறது அதே போல் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் புதைந்துள்ளனர்
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அண்ணாதுரை உத்தரவின் பெயரில் பல்லடம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்துக்குமாரசுவாமி தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் 15 பேர் மீட்புப் பணிக்கு தயாராக உள்ளனர் மேலும் மீட்பு பணிக்காக உபகரணங்களை எடுத்துக் கொண்டு தயார் நிலையில் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.