வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் ஊராட்சியில் 8 கிராமங்களுக்கு நடந்த மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் வருவாய் துறை தொடர்பான மனுக்கள் அதிகம் வந்தன.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக ஐந்து கட்டங்களாக மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி நடத்த தீர்மானிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரங்களில் ஆலங்குடி, அரித்துவாரமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. நேற்று ஆவூர் ஊராட்சியில் 44. ரெகுநாதபுரம், ஏரி வேலூர், ஊத்துக்காடு, விருப்பாச்சிபுரம், ஆதிச்சமங்கலம், சந்திரசேகரபுரம் உள்ளிட்ட 8 கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அமுதா, வலங்கைமான் தாசில்தார் ரஷ்யா பேகம், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ )செந்தில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியை, வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான வீ. அன்பரசன் துவக்கி வைத்தார். சிறுபான்மையின நலத்துறை, மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நலத்துறை ஆகிய 15 துறைகளை சேர்ந்த 44 சேவைகளை பொதுமக்களுக்கு விரைவாக வழங்கிடும் பொருட்டு இத்திட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், பட்டா கோருதல் உள்ளிட்ட வருவாய் துறை தொடர்பான மனுக்கள் அதிகளவில் வரப்பெற்றன. மேற்படி முகாம்களில் பெறப்பட்ட மனுக்களை 30 நாட்களுக்குள் முடிவு செய்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் துர்கா ரமேஷ் குமார், மணிகண்டன், ஆனந்த்ராஜ், ரேவதி சதீஷ், துர்கா தேவி வைரவேல், ஜெகதீசன், கவிதா, ஒன்றிய குழு உறுப்பினர் ரசூல் நஸ்ரின், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *