பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஊக்க பரிசு திருவிழா
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி சங்கம், ரிவர் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் அறம் அறக்கட்டளை இணைந்து நடத்திய கல்வி ஊக்கத் திருவிழா நிகழ்ச்சி
நடைபெற்றது. பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் சக்திவேல் தலைமையில் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற 50-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜெய.மனோகரன் பெண்களுக்கான ஒழுக்கக்கல்வி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து தஞ்சை மாவட்ட நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடத்தின் அதிகாரிகள்,
உணவு பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு
விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். பின்பு கேரளா
மாநிலம் வயநாடு பகுதியில் இயற்கைச் சீற்றமான
நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மௌன இரங்கல் அனுசரிக்கப்பட்டது. கல்வி ஊக்க திருவிழா நிகழ்ச்சியில், பாபநாசம் ரோட்டரி சங்கம், ரிவர்சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் அறம் அறக்கட்டளையின் நிர்வாகிகள், சமூகஆர்வலர்கள், பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள், பள்ளியின் அலுவலக நிர்வாகிகள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.