மதுரை நாகமலை புதுக்கோட்டை
நாடார் மகாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரியில் “குழந்தை உரிமைகளுக்கான மாணவர் மன்றம்” தொடங்கப்பட்டது.
இதில் கல்லூரி முதல்வர் முனைவர் தேன்மொழி, சிறப்பு விருந்தினர் மதுரை சைபர் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் விஜயபாஸ்கரனை வரவேற்று விழாவினை துவக்கி வைத்து பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜயபாஸ்கரன்,சப் – இன்ஸ்பெக்டர் ஆகியோர்
சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சைபர் குற்றம் மூலம் குழந்தைகள், பெண்கள்,மாணவர்களுக்கு என அவர்களுக்கு ஏற்படும் பல்வேறு குற்றங்களையும்,
சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளையும், தடுப்பு வழி முறைகளையும் விளக்கி கூறினர். இதில் பேராசிரியர் கள் மற்றும் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இரண்டாமாண்டு மாணவி அபிஷா நன்றி கூறினார்.