காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு, படப்பை, மணிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக சோமங்கலம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடுவீரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த சஞ்சய் (30) என்பவரை சோமங்கலம் போலீசார் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்
போலீசாரின் விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்தன. சஞ்சய் மற்றும் அவனது நண்பன் விஜய் ஆகிய இருவரும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து சஞ்சயிடம் போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் சஞ்சய் மற்றும் விஜய்க்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த மச்சி என்கிற முரளி கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
முரளி கிருஷ்ணனிடம் நடத்திய விசாரணையில் முரளி கிருஷ்ணன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்ததும் மேலும் போதை மாத்திரைகளை தூத்துக்குடி சேர்ந்த முகுந்தன் என்பவரிடம் பெற்று வந்ததாகவும் இதன் மூலம் மாதம் 3 லட்சம் வரை சம்பாதித்ததாகவும் காவல்துறையினர் கைது செய்த போது எல்லாம் விற்பனை செய்துவிட்டதும்
முகுந்தனுக்கு மும்பையில் உள்ள சப்ளையர்கள் மூலம் ரயிலில் பார்சலில் போதை மாத்திரைகள் கிடைத்து வருவதும் வி தெரியவந்துள்ளது
இதனையடுத்து நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த சேர்ந்த சஞ்சய் அவனது நண்பன் விஜய் மற்றும் சப்ளையர் மச்சி என்கிற முரளி கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் தலைமறைவாக உள்ள தூத்துக்குடியை சேர்ந்த முகுந்தனை தேடி வருகின்றனர்
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரை அதிகரித்து வந்த நிலையில் சோமங்கலம் போலீசாரின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது