குட்டத்துபட்டி ஊராட்சி ஒன்றியம் மைலாப்பூர் பகுதியில் முறையான குடிநீர் வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் குட்டத்துபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மைலாப்பூர் பகுதியில் சுமார் 3000 மக்கள் தொகை உள்ளது. இந்த பகுதியில் உள்ள குடிநீர் நீர் ஏற்ற தொட்டிகள் இரண்டு உள்ளது. மேலும் ஐந்து ஆழ்துளை கிணறுகள் உள்ளன.
இந்த சூழ்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குட்டத்துப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தால் மைலாப்பூர் கிராம மக்களுக்கு முறையான குடிநீர் வழங்கப்படவில்லை மோட்டார் பழுதடைந்துள்ளது, போர்வெல் கிணற்றில் மண் சரிவு உள்ளது என்று சாக்குப் போக்கு கூறிக்கொண்டு ஊராட்சி மன்ற செயலாளர் அவர்களின் முறையற்ற பதிலாலும் பொதுமக்களை மரியாதை குறைவாக நடத்தியதின் காரணமாகவும் மேலும் மைலாப்பூர் கிராமத்தில் குறைந்தபட்சம் 2000 கால்நடைகளும் இருக்கின்ற காரணத்தால் தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் மக்களும் கால்நடை உயிரினங்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் இதனால் ஊராட்சி மன்ற தலைவரிடமும் செயலரிடமும் பலமுறை நேரில் சென்று பேசியும் மனு கொடுத்தும் எந்தவித பயனும் இல்லாத சூழ்நிலையில் ஊர் கூட்டம் நடத்தி ஊர் கூட்டத்தில் குடிநீர் தேவைக்காக முறையான அறிவிப்பு கொடுத்து முறையான அனுமதியுடன் சாலை மறியலில் ஈடுபடுவது என முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து கன்னிவாடி சென்ற அரசு பேருந்தை மறித்து தங்கள் கோரிக்கையை அமைதியான வழியில் தெரிவித்தனர். ஆனாலும் காவல்துறையும் வருவாய்த் துறையும் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் கடைசிவரை ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்திற்கு வரவே இல்லை. வருவாய்த்துறையின் வேண்டுகோளை ஏற்று கிராம மக்கள் தங்களது சாலை மறியலை கைவிட்டனர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தலையிட்டு குட்டத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மைலாப்பூர் கிராமத்திற்கு முறையான குடிநீர் விநியோகம் நிரந்தரமாக செய்து தர வேண்டும் என்று கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.