கோவை
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் வங்கி சார்ந்த திட்டங்களை தெரிந்து கொள்ளும் விதமாக எச்.டி.எப்.சி வங்கி சார்பாக வணிக வெற்றிக்கான படிகள் எனும் விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது..
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் சிறு குறு தொழில் சார்ந்த துறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.இந்திய அளவில் அதிகம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் கோவை மாவட்டத்தில் செயல் பட்டு வருகின்றன..
இந்நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காகவும், தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் கோவை எச்.டி.எஃப்.சி.வங்கி சார்பாக வணிக வெற்றிக்கான படிகள் எனும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது..
இதில் கோவை,திருப்பூர்,ஈரோடு,நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிறு,குறு தொழில் துறையினர்,புதிய தொழில் முனைவோர்,சுய தொழில் துவங்க விரும்பும் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
எச்.டி.எப்.சி வங்கியின் கோவை மண்டல தலைவர் இளமுருகு கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இதில்,மாவட்ட தொழில் மையத்தின் வணிக துறை அலுவலர் சாந்தா ஷீலா கலந்து கொண்டார்..
இதில்,சிறு,குறு தொழில் துறையினர்,மற்றும் தொழில் முனைவோர்களுக்கான அரசு மானிய கடன் குறித்தும்,வங்கிகளில் உள்ள பல்வேறு தொழில் சார்ந்த திட்டங்கள் குறித்து விரிவாக உரையாற்றினர்.
மேலும்,சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானிய திட்டங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசினர்..