திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எஸ். எம். செந்தில் குமார், வலங்கைமான் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் என். இராதா, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பி. சின்ன ராசா, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்நடைபெற்றது.
இதேபோன்று வலங்கைமான் அருகில் உள்ள ஆலங்குடி கடைவீதியில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க நிர்வாகி கலியபெருமாள் ஆகியோர் தலைமையிலும் போராட்டம்நடைபெற்றது