ராஜபாளையத்தில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் முன்னால் எம்எல்ஏ டி.ராமசாமி . முன்னால் எம்பி மாவட்டச் செயலாளர் P. லிங்கம் ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.
காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் நகரச் செயலாளர் மாரியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சந்தன குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் விஜயன், மேற்கு ஒன்றிய செயலாளர் கணேச மூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ராமர், சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ரவி, ஆர் பி முத்துமாரி ஆகியோருடன் 23 பெண்கள் உட்பட 172 பேர் கைதாகினர்.