திண்டுக்கல் மாநகராட்சி காந்தி காய்கறி சந்தை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு பி பிரிவு கடைகளை இரண்டரை ஆண்டுகளாக ஒதுக்கப்படவில்லை அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை கட்டப்பட்ட கழிப்பறை நீண்ட நாட்களாக திறக்கப்படவில்லை நுழைவாயிலில் கேட் அமைக்காததால் ஆடு மாடு நாய் உள்ளிட்ட விலங்குகள் சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இருப்பதாகவும் சமூக விரோதிகள் இரவில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காந்தி காய்கறி சந்தை மார்க்கெட்டின் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.