தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள என் ஜி ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர்
சிதம்பரம். இவர் வாசுதேவநல்லூர் மற்றும் குருவிகுளம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருக்கும் போது அவருடைய 5 லட்ச ரூபாய் காசோலையை
தவற விட்டுள்ளார்.

சங்கரன்கோவில் போக்குவரத்து தலைமை காவலர் பெரியராஜ் அதே பகுதியில் போக்குவரத்தை சரி செய்து வந்தபோது கவருடன் கிடந்த செக்கை பத்திரமாக எடுத்து வைத்தார்.

பின்பு காசோலையில் இருந்த வங்கி கணக்கு என்னை பயன்படுத்தி அவரது விலாசத்தை கண்டுபிடித்து அவருடைய கைபேசிக்கு தகவல் அளித்தார்.

இதனை அடுத்து காசோலைகளை தவறவிட்ட சிதம்பரம் தவறவிட்ட இடத்திற்கு விரைந்து வந்தார். அதன்பின் அந்த காசோலை தனக்கு உரியது என்பதற்கான ஆதாரங்களை காட்டினார்.

அதன் அடிப்படையில் சங்கரன்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மார்ட்டின் முன்னிலையில் காசோலைகள் கூட்டுறவு சங்க மேலாளர் சிதம்பரம் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட சிதம்பரம் சங்கரன்கோவில் போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் பெரிய ராஜ் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் மார்ட்டின் ஆகியோருக்கு நன்றி கூறினார்.

5 லட்சம் ரூபாய்க்கான கையெழுத்திடப்பட்டு தவறவிடப்பட்ட காசோலைகளை
6 மணி நேரத்தில் உரியவரை
கண்டுபிடித்து அவரிடம் காசோலையை ஒப்படைத்த சங்கரன்கோவில் போக்குவரத்து போலீசாருக்கு காவல்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *