தென்காசி,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி
தென்காசி – வட்டார வளமையம்
புதிய பாரத எழுத்தறிவு திட்டம்
தன்னார்வலர் பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தென்காசி வட்டார வளமையம் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் தன்னார்வலர் களுக்கான ஒரு நாள் பயிற்சி தென்காசி சி.எம்.எஸ் மெக்விற்றர் நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.
இந்த பயிற்சியில் வட்டாரக் கல்வி
அலுவலர்கள் சண்முக சுந்தர பாண்டியன், இளமுருகன் தலைமை ஆகியோர் வகித்தனர். 52
பள்ளிகளை சார்ந்த 57 தன்னார்வலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் பார்வதி, பூமாரி, அற்புதமாரி, மாரிமுத்து ஆகியோர் பயிற்சி வழங்கினர்.
இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு, தேநீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது.
புதிய பாரத எழுத்தறிவு திட்ட மைய செயல்பாடுகள் குறித்துக் கூறப்பட்டது.
கற்போர்களுக்கு தங்களுடைய பெயர், குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள், உயிரெழுத்துகள்,
மெய்யெழுத்துகள், உயிர் மெய்யெழுத்துகள், எண்கள், எண்கள் உபயோகப்படுத்தும் இடங்கள் நேரம் பார்க்கும் முறை, டிஜிட்டல் எண்கள் எளிய கூட்டல், கழித்தல் கணக்குகள், வாழ்க்கைக்
கணக்குகள் ஆகியவற்றைப் பற்றி கற்றுக்கொடுக்கும் முறை பற்றி பயிற்சியில் விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துக்
கூறப்பட்டது.
இந்த பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளித்தலைமை ஆசிரியர் மற்றும் தென்காசி வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ஆகியோர்மேற்கொண்டனர்.