தென்காசி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் சொக்கம்பட்டி சி.எஸ்.சங்கர நாராயணன் கடந்த 19.07.2024 அன்று காலமான நிலையில் அவரது கண்களை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர்.
சொக்கம்பட்டி முன்னாள் கர்ணம் சி.எஸ்.சடையப்ப பிள்ளையின் மூத்த மகனும், தென்காசி பிஎஸ்என்எல் அலுவலர்
சி.எஸ். சடையப்பன் மற்றும் சி.எஸ்.ஆறுமுகம் ஆகியோரின் தந்தையுமான சி.எஸ்.சங்கர நாராயணன் கடந்த 19.07.2014 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.
மறைந்துவிட்ட உதவி தலைமை ஆசிரியர் சி எஸ் சங்கர நாராயணன் ஏற்கனவே தனது கண்களை தானம் செய்வதாக பதிவு செய்திருந்தார். அதன்படி அவரது குடும்பத்தினர் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சொக்கம்பட்டிக்கு வருகை தந்து மறைந்த உதவி தலைமை ஆசிரியர் சி எஸ் சங்கரநாராயணன் அவரது இரண்டு கண்களையும் முறைப்படி எடுத்துச் சென்றனர்.
காலமான உதவி தலைமை ஆசிரியர் சி.எஸ். சங்கரநாராயணன் கண்களைத் தானமாக அளித்து நான்கு நபர்களுக்கு கண்ணொளி வழங்கிட வழி செய்தமைக்கு அன்னாரின் குடும்பத்தாருக்கு நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் கடையநல்லூர் சொக்கம்பட்டி பகுதி பொதுமக்கள் நன்றி கூறியதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் என்று தெரிவித்தனர்.