அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு தனித்து பாத்தியப்பட்ட ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பாலவிநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகவிழாயோட்டி கோவில் வளாகப் பகுதியில் 48 வது நாள் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது.
யாகசாலை பூஜையில் மங்கள இசை முழங்க யாகவேள்வி பூஜைகள் 7 வித சிறப்பு ஹோமங்கள் நடந்தது.
தொடர்ந்து அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, இரண்டாம் கால யாகவேள்வி தீபாராதனையை தொடர்ந்து மகா பூர்ணாகுதி, தீபாராதனை, நடைபெற்றது.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது பின்னர் கோவில் கருவறையில் அமைந்துள்ளபாலவிநாயகருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.
இந்த மண்டல பூஜைக்கு வருகை தந்த பக்தர்கள், மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதமும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை சங்கம் செய்திருந்தது.