வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, செம்பராய நல்லூர் சமத்துவபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.11.97 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்து குத்து விளக்கேற்றினர்.
இந்நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றியகுழு தலைவர் வே.வேல்முருகன், ஒன்றியகுழு துணைத் தலைவர் எஸ்.சரவணன், மாவட்ட கவுன்சிலர் கே.சுலோச்சனா கிருபாகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பி.டில்லிராணி பரஞ்ஜோதி, பி. நந்திவர்மன், செம்பராய நல்லூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜீவிதா ரமேஷ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) சுஜாதா, காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.