தென்காசி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் புதியதாக உதயமானதிலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வந்தது இதனை அடுத்து தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து தென்காசி மாவட்டத்திற்கு புதியதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது
இதன்படி 2.15 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த இடத்தில் 4524 சதுர மீட்டர் அளவில் 11 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுதிறக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வருவாய் பேரிடர் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், ராஜா, சதன் திருமலை குமார் தென்காசி நகர மன்ற தலைவர் சாதிர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி கரிசல் வேலுச்சாமி மற்றும் அரசியல் கட்சியினர், காவல் துறையினர், அதிகாரிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.