பழனி மலை கோவில் படிப்பாதையில் உள்ள மடங்களில் சில கடைகள் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது படிப்பாதையில் தங்கம்மாள் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடைகளை அகற்ற திருக்கோவில் நிர்வாகம் முற்பட்டது. அப்போது குறிப்பிட்ட இடம் தனக்கு சொந்தமானது என்றும், எனவே அதில் திருக்கோவில் நிர்வாகம் தலையிடக்கூடாது என்றும் தங்கம்மாள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து வருவாய் துறைனர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் இருதரப்பினர் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் உடன்பாடு ஏற்படாததால் தங்கம்மாளின் பேரன் வசந்த் என்பவர் மலைக்கோவில் மண்டபத்தின் மீது ஏறி தலை மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற இளைஞரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக கடைகளுக்கு சீல் வைப்பதாகவும் மேற்கொண்டு நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணவும் முடிவெடுக்கப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தனியாருக்கு சொந்தமான கடைகளை அகற்ற திருக்கோவில் நிர்வாகம் என்ற போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்கம் என்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *