செங்கோட்டை.
செங்கோட்டையில் நகர சபை கூட்டம் நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி தலைமையில் நடந்தது.
நகர் மன்றத் துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் நகராட்சி ஆணையாளர் (பொ) சுமா முன்னிலை வகித்தனர். மேலாளர் கண்ணன் தீர்மானங்களை வாசித்தார்.
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் 8- வது வார்டு கவுன்சிலர் எஸ். எம் . ரஹீம் பேசுகையில், தாலுகா அலுவலகம் முன்பு 6 மாதமாக எரியாமல் உள்ள ஹை மாஸ் விளக்குகளை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து வார்டுகளிலும் உள்ள அடிபம்பு , ஆழ்துளை குடிநீர் கிணறுகளை சரி செய்ய வேண்டும், நகராட்சி பணிகளுக்கு பிளம்பர் ஒருவரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும், நகராட்சியில் உள்ள எரி மேடையை நகராட்சி நிர்வாகம் நடத்துவதில் சிரமம் உள்ளதால் தொண்டு நிறுவனத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார் , கூட்டத்தில் கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், சுடர் ஒளி, சரஸ்வதி ,ஜெகநாதன், பினாஷா, இசக்கியம்மாள், மேரி, பேபி ரஜப் பாத்திமா, சரவண கார்த்திகை, இசக்கிதுரை பாண்டியன் ,இந்துமதி, சந்திரா, முருகையா, ராம்குமார், ராதா, முத்துப்பாண்டி, செல்வகுமாரி ,சுகந்தி ,வேம்புராஜ் , செண்பகராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.