கோவை சரவணம்பட்டி,சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல், யோகாவை தொடர் பயிற்சிகள் வாயிலாக வழங்குவதுடன் ,தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் சாதனை படைக்கவும் ஊக்கம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்டோபர் மாதம் ஸ்ரீலங்காவில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிக்கான தேர்வு போட்டி சித்தாபுதூர் பிராணா யோகா மையத்தில் நடைபெற்றது. கடந்த வருடம் தாய்லாந்து, மலேசியா, துபாய் மற்றும் அந்தமான் பகுதிகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை பிராணா யோகா மையத்தின் நிறுவனர்கள் ஜெயலட்சுமி,மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், சப் ஜூனியர்,ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில்,ஆர்ட்டிஸ்டிக்,ரிதமிக்,அத்லெட்,உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆர்வமுடன் பலர் கலந்து கொண்டனர்….
இதில் போட்டியாளர்கள் ஹலாசனம், மச்சாசனம், சுப்த வச்ராசனம், சிரசாசனம் ,சக்ராசனம், திரிகோண ஆசனம், பத்மாசனம், உஷ்ராசனம், தனுராசனம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆசனங்கள் செய்து அசத்தினர்.
இதில் தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்கள் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி தெரிவித்தனர்..