விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டாரம் வேளாண்துறையின் மூலம் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் வேளாண்மை துறையின் மூலம் விவசாயிகளுக்கு தக்கை பூண்டு விநியோகம் செய்யப்பட்டது.
விருதுநகர் வேளாண்மை இணை இயக்குனர் விஜயா வேளாண் துணை இயக்குனர் (மா நி) மற்றும் ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி, விதைச்சான்று உதவி இயக்குனர் கோகிலா ஆகியோர் தக்கை பூண்டு விதையை விதைத்த பயனாளிகளான கருப்பையா, குருசாமி, கடல் மணி, பெருமாள், முத்துச்சாமி, கணேஷ், ஈஸ்வரன் ஆகியோரின் திடலை ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு மேற்கொண்ட போது விவசாயிகளுக்கு தக்கை பூண்டு பற்றி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 முதல் 40 கிலோ வரையிலும் பயிர்களுக்கு ஏற்ப விதை அளவு பயன்படுத்தலாம் எனவும், 40 முதல் 50 நாட்களுக்குள் பூப்பூக்கும் தருணத்தில் மடித்து உழுதிட வேண்டும் எனவும், இதன்மூலம் சராசரியாக ஹெட்டருக்கு 20 முதல் 30 டன் பசுந்தால் வரை கிடைக்கிறது.
எனவே அங்கத்தன்மை GVயை அதிகரித்து மண்வளம் அதிகரிக்கிறது என்று விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.