யங் இந்தியா சார்பில் மதுரையில்
மாமதுரை விழா வரும் ஆகஸ்ட் 8 ம் தேதி நடைபெற இருக்கிறது.
நிகழ்வின் பொறுப்பாளர்களை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம்,
மாமதுரை விழாவின் மூத்த வழிகாட்டி மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ,
யங் இந்தியன்ஸ் தலைவர் பைசல் அஹமத், ஒருங்கிணைப்பாளர் விக்ராந்த் கார்மேகம் மற்றும் யங் இந்தியன்ஸ் துணைத் தலைவர் சென்ஹர் லால்.
மதுரையில் சுற்றுலா பாரம்பரியம் கலை வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது.
உணவு திருவிழா மற்றும் வர்த்தக பொருட்காட்சி தமுக்கம் மைதானத்திலும், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் மகளிர் தொழில் முனைவரால் நடத்தப்படும் பொருட்காட்சி காந்தி மியூசியத்திலும், பலூன் திருவிழா வைகை கரையோரத்திலும், இரண்டடுக்கு பேருந்து பவனி மற்றும் இறுதி யாக மதுரை கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் அலங்கார ஊர்தி மற்றும் கலைஞர்களின் பேரணி இறுதியாக நடைபெற இருக்கிறது.
மாமதுரை விழாவில் மொத்தம் 20 நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மாமதுரை விழாவின் துவக்கம் ஆகஸ்ட் 8ம் தேதி தமுக்கத்தில் நடைபெற உள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துக்கி வைக்க இருக்கிறார். மேலும் துவக்கு விழா நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியாளர் மாநகர ஆணையாளர் மற்றும் காவல் துறை ஆணையாளர் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மாமதுரை விழாவை முன்னிட்டு மதுரை புகழ் பாடல்கள் வெளியிடப்பட்டது. மாமதுரை பாடல் அடங்கிய குறுந்தகட்டை
சு.வெங்கடேசன் (மதுரை பாராளுமன்ற உறுப்பினர்) வெளியிட டாக்டர். ஹேமா சதீஷ் (தேவதாஸ் மருத்துவமனை) பெற்றுக் கொண்டார்.