கோவையில் நாராயண் சேவா சன்ஸ்தான் சார்பாக நடைபெற்ற மாபெரும் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாமில் தமிழகம்,கேரளா,கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு இந்தியா மட்டுமின்றி ஆப்ரிக்க நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம்களை வழங்கி வருகின்றனர்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலன்களை கருதி,அவர்களுக்கான பல்வேறு பிரத்யேக மையங்களை நடத்தி பயிற்சி வழங்குவது, நலத்திட்டங்கள் வழங்குவது என சமூக நல பணிகளை செய்து வருகின்றனர்..

இந்நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக, கோவையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற முகாமில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை மூட்டு மற்றும் காலிபர்களுக்கான அளவீடுகள் எடுக்கப்பட்டன..

இதனை தொடர்ந்து அளவீடுகள் எடுக்கப்பட்ட செயற்கை மூட்டுகளை பயனாளிகளுக்கு மருத்துவ குழுவினர் உதவியுடன் பொருத்துவதற்கான முகாம் கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள மகேஸ்வரி பவன் அரங்கில் நடைபெற்றது.
இதற்கான துவக்க விழாவில்,நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பின் தலைவர் பிரசாந்த் அகர்வால், மகேஸ்வரி சங்கத்தின் தலைவர் கோபால் மகேஸ்வரி, மகேஸ்வரி பவன் செயலாளர் சந்தோஷ் முண்டாடா,சமூக ஆர்வலர்கள் கமல் கிஷோர் அகர்வால்,வெங்கடேஷ்,சீதாராம்,ராஜஸ்தான் சங்கத்தின் தலைவர் கவுதம் ஸ்ரீ ஸ்ரீ மால்,கைலாஷ் ஜெயின்,செய்தி தொடர்பாளர் பகவான் பிரசாத் கவுர்,ஹரி பிரசாத் லட்டா,ஐஸ்வர்யா திரிவேதி ஆகியோர் கலந்து கொண்டனர்..

இந்த முகாமில் கோவை,ஈரோடு,சேலம்,மதுரை,திருச்சி என பல்வேறு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா,கேரளா மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட 738 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை மூட்டு மற்றும் காலிபர்கள் பொருத்தப்பட்டன..

இதில் 50 க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர்களுக்காக தனித்தனியே அரங்குகள் அமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை,கால்களை பொருத்தி செயல்படுவதற்கான பயிற்சிகளை அளித்தனர்..

சுயமாக நடக்க முடியாமல் உதவியாளர்களுடன் வந்த மாற்றுத்திறனாளிகள் இலவசமாக செயற்கை மூட்டுக்களை பொருத்தி தானாக நடந்து சென்றதை கண்ட உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *