V. சீராளன் பண்ருட்டி செய்தியாளர்
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு மேல் டாக்டர் பால் தினகரன் அவர்கள் தனது சீஷா தொண்டு நிறுவனம் மற்றும் காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம் மூலம் நிவாரண பொருட்கள், அன்றாட சுகாதார பொருட்கள், உணவு மற்றும் மருந்துகள் போன்றவற்றை வழங்கினார்.
சீஷா தொண்டு நிறுவன தலைமை செயல் அதிகாரி திரு மோசஸ் பால்மர் அவர்கள் தலைமையில் கல்பேட்டா தொகுதி MLA சித்திக் அவர்கள் மூலமாக நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கினர்.
சகோதரர் பால் தினகரன் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதியின் MLA சித்திக் அவர்களை தொடர்பு கொண்டு தனது நிறுவனத்தின் மூலம் இயன்ற உதவிகளை செய்வதாக உறுதியளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட உறவினர்களை இழந்த மக்களுக்காக இறைவேண்டுதல் ஏறெடுத்தார். சீஷா குழுவினர் தொடர்ந்து களப்பணியாளர்களுடன் உதவி செய்து வருகின்றனர்.
முன்னதாக நிவாரண பொருட்களடங்கிய வாகனங்களை காருண்ய நிகர் நிலை பல்கலை கழக துணை வேந்தர் முனைவர் பிரின்ஸ் அருள்ராஜ் மற்றும் இணை துணை வேந்தர் முனைவர் எலைஜா ப்ளஸிங் அவர்களும் காருண்யா நகரிலிருந்து கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர்.
மேலும் சீஷா பேரிடர் மீட்பு குழுவினர் சார்லஸ், நீல் , பிரான்சிஸ் ,சாலமன், மணிவண்ணன் ,ஜோசியா, ரூபன், அருண், செந்தில் மற்றும் சைமன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா முழுவதும் வறுமையில் வாடும் மக்களை நாளுக்கு நாள் ஆதரித்து வரும் சீஷா தொண்டு நிறுவனம் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டி அனைவரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.