தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் இரண்டு விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில், அவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி 22 மீனவர்களையும் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, வருகிற 20-ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி உடன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றியக் குழுத் தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் இளையராஜா மற்றும் பலர் உடனிருந்தனர்.