கோவையில் நடைபெற்ற, இன்டர் ஃபவுண்டரி இன்டர் டை காஸ்ட் 2024 கண்காட்சியில்,உலோக வார்ப்பு தொழில் துறை சார்ந்த பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் காட்சி படுத்தபட்டு இருந்தன…
இந்திய ஃபவுண்டரி துறை உற்பத்தி பொருளாதாரத்திற்கும், பொதுப் பொருளாதாரத்திற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றது..
இந்நிலையில், கோவையில்,இன்டர் ஃபவுண்டரி இன்டர் டை காஸ்ட் 2024 கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது..
ஆகஸ்ட் 22 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா கண்காட்சி அரங்கில் நடைபெற்றது..
விழாவில் கோவையை சேர்ந்த முக்கிய தொழிலதிபர்கள் ஏ.வி.வரதராஜன்,எஸ்.ரவி,ஸ்ரீவத்ஸ் ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்
கண்காட்சியில் பேசிய முக்கிய விருந்தினர்கள்,
இந்தியாவின் உலோக வார்ப்புத் தொழில் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. மேலும் நவீன தொழில் நுட்பங்கள், வார்ப்பு செயல்முறைகளை மேம்படுத்தி, உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளன.மேலும்
உலக அளவில், ஆட்டோமொபைல், விமானம் மற்றும் மின் உற்பத்தி துறைகளில் உலகளாவிய தேவை அதிகரித்துள்ளது. இதனால், இந்தியாவின் வார்ப்புத் தொழில் பெரிதும் பயனடைந்துள்ளதாக தெரிவித்தனர்..
கண்காட்சியில், இந்தியாவின் உலோக வார்ப்புத் தொழில் எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சி அடையும் விதமாக உள்நாடுகள் மட்டுமின்றி வெளி நாட்டு நிறுவனங்களும் தங்களது புதிய தொழில் நுட்பங்களை காட்சி படுத்தி இருந்தனர்..