மதுரை ஒத்தக்கடை நாஃபிஈ உலமா பேரவை சார்பில் இன்று தென் மாவட்ட ஆலிம் எழுத்தாளர்கள் மற்றும் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கமம் நிகழ்ச்சி மதுரை கே.புதூர் சர்வேயர் காலனி பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒத்தக்கடை அரபிக் கல்லூரி பேராசிரியர் அப்துல் அஜீஸ் ரஷாதி தலைமை வகித்தார். அப்துல் காதிர் ஹஜ்ரத், சென்னை பல்கலைக்கழக உருது துறை தலைவர் ஜாகிர் உசேன் பாகவி மற்றும் ரஹ்மத் ராஜகுமாரன், சிறப்புரையாற்றினார்கள். இதில் 42 சாதனையாளர்களுக்கு விருது மற்றும் பொற்கிழி, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.