எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் கடவாசல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர் விழி திருமாவளவன் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகரச் செயலாளர் சுப்புராயன் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மேலும் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் ஏராளமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் சிறப்பு உரையாற்றிய மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் பேசுகையில் கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் தொகுதியில் தங்களது செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும் மேலும் வாக்கு சதவீதம் அதிகப்படுத்த வேண்டும் 2026 இல் நமது கழக ஆட்சியை மீண்டும் வளர செய்ய வேண்டும் குறிப்பாக தற்போது இளைஞர்களை கழகத்திற்கு பணியாற்ற அழைக்க வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்