மாதவரத்தில் போலி மருத்துவர் கைது. கிளினிக் இழுத்து மூடப்பட்டது
செங்குன்றம் செய்தியாளர்
மாதவரத்தில் போலியாக இயங்கி வந்த கிளீனிக்கை சீல் வைத்து போலி டாக்டரையும் கைது செய்த போலீசார்
மாதவரம் பொன்னியம்மன்மேடு,
கிருஷ்ணா நகர் முதல் தெருவில் என் ஆர் கே என்ற பெயரில் ஹெல்த் கேர் கிளினிக் இயங்கி வந்தது. இதனை சென்னை அரும்பாக்கம் எம் எம் டி ஏ பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (வயது 54) என்பவர் நடத்தி வந்தார்.
கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக நடத்தி வந்த இந்த கிளீனிக்கில் மருத்துவர் மணிமாறன் மீது பல புகார்கள் வந்த நிலையில், இவரை மாதவரம் முதன்மை மருத்துவ அதிகாரி தனலட்சுமி அவரது கிளினிக் சென்று அவருடைய சான்றிதழ் மற்றும் படிப்பு சம்பந்தமான வினாக்களை கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக விளக்கம் அளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவ அலுவலர் இதுகுறித்து டி எம்எஸ் சில் உள்ள மருத்துவ மேல்அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார் பின்னர் அங்கு வந்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவர் சித்தா வைத்தியம் படித்து ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது மேலும் எட்டாம் வகுப்பு வரை படித்த அவர் தனது பெயருக்கு பின்னால் மருத்துவர் என அங்கீகாரம் கொடுத்தது போல் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார்.
மேலும் அந்த கிளினிக்கில் ஆங்கில மருந்துகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர் . அதன் பின் மருத்துவ அதிகாரிகள் மாதவரம் காவல் நிலையத்தில் போலி மருத்துவர் பற்றி புகார் அளித்ததில் மாதாவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூபாலன் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலி மருத்துவரான மணிமாறனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்