அரியலூர்
அரியலூர் காமராஜர் சிலை அருகே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாமாண்டு நிறைவுநாளையொட்டி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
தெருமுனை பிரச்சாரத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர் தலைமை வகித்தார். மூத்தத்தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், மாவட்டப் பொருளாளர் மனோகரன், நகரத்தலைவர் மு.சிவக்குமார், வட்டாரத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், கர்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.