சீர்காழி செய்தியாளர்
சு.செல்வக்குமார்
சீர்காழி அருகே செம்பியன் வேலங்குடி கிராமத்தில் பாழடைந்த குடிசையில் வசித்த மாற்றத்திறனாளி குடும்பத்திற்கு ரூபாய் 2.25 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பான வீடு கட்டிக் கொடுத்த சமூக ஆர்வலர். திறப்பு விழா செய்து புத்தாடை மற்றும் மளிகை பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலருக்கு கிராம மக்கள் பாராட்டு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பியன் வேலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் காசி அம்மாள் இவரது மகன் மதியழகன் மாற்றுத்திறனாளியான இருவரும் பழுதடைந்த குடிசை வீட்டில் வசித்து வந்தனர் எந்த நேரத்திலும் இடிந்து விடும் நிலையில் மண் சுவர்களால் ஆன வீட்டில் பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வந்தனர். தாயும் மகனும் மாற்றுத்திறனாளிகள் என்பதால் எவ்வித பணிக்கும் செல்ல முடியாமல் போதிய வருமானமின்றி தவித்து வந்தனர்.
இவர்கள் நிலை குறித்து அறிந்த மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரை சேர்ந்த சமூக சேவகர் பாரதிமோகன் அவர்களின் வீட்டிற்கு வருகை தந்து நேரில் பார்வையிட்டு உடனே பாதுகாப்பான வீடு கட்டி தருவதாக உறுதியளித்தார்.
அதன்படி பாரதி மோகன் தனது நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் ருபாய் 2.25 லட்சம் மதிப்பில் பாதுகாப்பான வீடு கட்டும் பணி கடந்த மாதம் துவங்கப்பட்டது.அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை மாற்றுத்திறனாளி தாய் மற்றும் மகனை வைத்து திப்பு விழா செய்து அவர்களிடம் ஒப்படைத்தார்.
அத்துடன் 10 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு அரிசி,ரொக்கப்பபணம் உள்ளிட்ட நலதிட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு சமூக வலைதள நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியோடு பாதுகாப்பான வீடு கட்டிக் கொடுத்த சமூக ஆர்வலர் பாரதி மோகனுக்கு கிராம மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து பெரம்பூரை சேர்ந்த சமூக சேவகர் பாரதிமோகன் கூறுகையில் கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருகின்றேன். ஆதரவற்று சாலையில் திரிபவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நபர்களுக்கான மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி ஆதரவற்ற நபர்களுக்கு தடையின்றி மூன்று வேளை உணவும் வழங்கி வருகின்றேன்.
தற்பொழுது எவ்வித அடிப்படை வசதியும் இன்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் பணியை துவங்கியுள்ளேன். ஆதரவு இன்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன் என தெரிவித்தார். மேலும் தனது சமூக சேவைக்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்தார்.