திண்டுக்கல்லில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்.
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் பழனிச்சாமி என்பவரின் மகன் கிஷோர். 11 வயதான இவர் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் மூளைச் சாவு அடைந்தார். இதனை அடுத்து சிறுவனின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்துள்ளனர்.