திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா ஆனது திருவாரூர் அரசு போக்குவரத்துக் கழகம் பணிமுனை நுழைவாயில் அருகே திமுக கழக கொடி மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்க கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.
இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருக்கும் போதும் மத்திய சங்க பொது செயலாளர், பேரவை செயலாளர், குடந்தை, நாகை மண்டலம் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற
இவ்விழாவில் திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளர், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் மாண்புமிகு முன்னாள் அமைச்சர், தாட்கோ மாநில தலைவர் உ.மதிவாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு திருவாரூர் நகர கழக செயலாளர் வாரை. பிரகாஷ், ஒன்றிய கழகச் செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் தேவா, மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர், திட்டக் குழு உறுப்பினர் இரா.சங்கர் மத்திய சங்க பொருளாளர் திருவரசமூர்த்தி, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் கலியபெருமாள், மத்திய சங்க அலுவலக செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இடைவிடாமல் பெய்து கொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கலந்து கொண்டனர். அவர்களுக்கு இலவச வேட்டி,சேலை மாணவர்களுக்கு நோட்டு,புத்தகம் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
உடன் கொரடாச்சேரி தெற்கு கழக ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி, நகர மன்ற உறுப்பினர் அசோகன், கிளை பொருளாா் ரவிச்சந்திரன், கிளைத்துணை தலைவர் ராஜசேகர், கிளை துனை செயலாளர் சண்முகம் தொமுச பொதுக்குழு உறுப்பினர்கள் அறிவழகன், சபாபதி, வெங்கடேசன், முத்துக்குமாரசாமி, வெற்றிவேல், கண்ணன், வெற்றிவேல், ரவிச்சந்திரன், வினோத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவாரூர் கிளைச் செயலாளர் சேகர் நன்றி தெரிவித்தார்.