புதுச்சேரி அரசின் சமூகநலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார்.

இதில் சமூகநலத்துறை துணை இயக்குனர் ஆறுமுகம், அலுவலக அதிகாரிகள் அன்பரசன், சுருதி மற்றும் தொகுதி திமுக செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாஸ், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், தொழிலாளர் முன்னேற்ற பேரவை சங்க தலைவர் அங்காளன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், அயலக அணி துணை அமைப்பாளர் தாஜா, இலக்கிய அணி துணை அமைப்பாளர் களிமுல்லா, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பஜலுதீன், தொகுதி துணை செயலாளர் ஜெகன்மோகன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் சபரி, ராஜி, கே.வி.ஆர் ஏழுமலை, ரபீக், மிலிட்டரி முருகன், திலகர், ராஜா முகமது, கார்த்திகேயன், பாலகுரு, ராஜேந்திரன், முருகேசன், நடராஜன், முத்து, ஹரிஹரன், ஜீவானந்தம், கோவிந்தராஜ், மணக்குள விநாயகர் சுரேஷ், பிரவீன், ரகு, கோதண்டம், அன்பு, ராஜேஷ், பவித்ரன், மனோ, கோபி, சூர்யா, சின்னத்தம்பி ஆகியோர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *