கடலூர் மாவட்டம் கடலூர் தலைமை மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நிலையத்தில்
ஊழியர் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். பல மணி நேரமாக காத்திருந்து ரத்த பரிசோதனை செய்து பின்பு மருத்துவமனை டாக்டரிடம் காண்பித்து அதற்குண்டான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் ஆகையால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு மாவட்ட தலைமை மருத்துவமனை தள்ளப்பட்டுள்ளது.
ஆகவே ஊழியர்களை நியமித்து பொதுமக்களுக்கு செம்மையாக பணியாற்றிட மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் வழிவகை செய்யுமா? மாவட்ட பொதுமக்கள் எதிர்பார்ப்பு